இது கவிதை இல்லைங்கோ

நேற்று அந்தி சாய்ந்த
வேளையில் தொடங்கிய வேலை
அப்பாடா ஒர் வழியாக
முடிந்து விட்டது.

இன்னும் என்ன வேலை
இராத்திரி கருப்பில்
வெள்ளை அடிக்கப்பட்டுவிட்டது
மணி பத்து’ம் அடித்துவிட்டது.

தூங்கலாமா ?
“அடேய் ! அடுத்த வேலை
இன்னும் அடுத்த சில மணிகளில்
முன்னேற்பாடு ஆயிற்றா? ”
பாடாய்படுத்துகிறது மூளையின் கட்டளை.

ஹம்ம்ம் இந்த மூளைக்கு
அறிவே இல்லை.
உறக்கம் இல்லாத
சொர்க்க வாழ்வு எதற்காம்... ?
திட்டுகிறது எனது ஆறாம் அறிவு...!!

அடுத்த வேலைக்கு
இடைவேளை இன்னும் இருக்கு?

எழுத்து தளம்
திறக்கலாமா?
கவிதையொன்று
எழுதலாமா?

எதை எழுதி
என்ன சொல்ல?
அயர்ச்சியில் சிந்தனைக்கு
ஏதும் அகப்படவில்லை.

புதியதாய் ஏதாவது ரசிக்கலாம்...

திருவள்ளுவனிடம்
புதுக்கவிதை கேட்கலாமா?
கண்ணதாசனுடன் கவி
போதையில் வீழ்ந்துவிடலாமா?
வாலியோடு இளமையுடன்
வம்புக்கு இழுக்கலாமா?

என்னது.....................!!
இவர்கள் யாரும்
உயிருடன் இல்லையா?
-------------------
--------------------

அடே கோமாளி !!
உளறாதே. என்று
இயங்காமல் கண்டிக்கிறாள்
என் கணினி !

Ctrl+Alt+Del
End Task.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (24-Nov-13, 11:37 am)
பார்வை : 377

மேலே