காதலென்னும் சோலையினில்5

ராஜசேகரனை தேடி அவன் ஊருக்கு சென்ற கவிதா முகவரியை கண்டுபிடித்து சேர்வதற்குள் ரொம்ப சிரமப்படுகிறாள். ஆனால் அதெல்லாம் நினைத்து அவள் கவலைப்படவில்லை எப்படியாவது அவனை காணவேண்டும் விஷயங்களை சொல்லி அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவள் எண்ணமாக இருந்தது.................
ஒரு வழியாக அவன் முகவரியை கண்டுபிடித்து அவன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறாள்!
வீடே கல்யாண களை கட்டி காணப்படுகிறது யோசித்துக்கொண்டே உள்ளே சென்று காவலாளியிடம் விசாரிக்கிறாள்.......
கவிதா: இது ராஜசேகரன் வீடு தானே?
காவலாளி: ஆமா! நீங்கள் யார்?
கவிதா: நான் அவருடையத் தோழி ஒரு முக்கியமான விஷயமாக உடனே அவரை பார்க்க வேண்டும்.
(காவலாளி அவளை உள்ளே அனுமதிகிகிறான்)
உள்ளே 25வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள்.......(இவள் பெயர் தாரா)
கவிதா: இங்கு ராஜசேகரன் (என்று இழுக்கிறாள்...)
தாரா: ஆமா இருக்கிறார். நீ யார்?
கவிதா:நான் அவருடைய தோழி அவரை பார்க்க வேண்டும்.
தாரா: இப்போது அவரை பார்க்கமுடியாது, என்ன விஷயம்னாலும் என்னிடம் கூறு நான் சொல்லிக்கொள்கிறேன்,
கவிதா: ரொம்ப முக்கியமான விஷயம் அவரிடம் தான் சொல்ல வேண்டும்.
தாரா: என்னிடம் சொல் இல்லையென்றால் கிளம்பு என்று திமிராக பதில் சொல்கிறாள்.
கவிதா வேறு வழியில்லாமல் நடந்த விஷயங்களை எல்லாம் அப்படியெ ஒன்று விடாமல் சொல்லி முடித்து இறுதியில் அழுகிறாள்......
தாரா:இவ்ளோ தானா!
கவிதா:(இவ்ளோ பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக கேட்கிறாள் இவள் எல்லாம் ஒரு பொண்ணா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.......)
தாரா:ஹலோ என்ன அங்க சிந்தனை அடுத்த வசதியான வீட்டு பையனை எப்படி மடக்கலாம் என்றா?
(தாராவின் கேள்விகளோ இவளை வாட்டி எடுத்தது ஒழுங்காக அவனே வந்து என்னை திருமணம் செய்திருந்தால் இவர்களின் தேவையற்ற பேச்சுக்கள் கேட்டு அவமானப்பட வேண்டுமா என்று கண்னீர் விட்டு கதறுகிறாள்)
தாரா: எவ்ளோ பணம் வேண்டும் கேள் நான் தருகிறேன் வாங்கி விட்டு இங்கிருந்து கிளம்பு.
கவிதா: போதும் நிறுத்துங்கள்! நான் பணத்திற்காக இங்கு வரவில்லை, என் வாழ்க்கைக்கும் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தான் நியாயம் கேட்க வந்திருக்கிறேன் என்று கதறுகிறாள்.
தாரா: நிறுத்து டி நீ உனக்கு வாழ்க்கை கேட்கிறாய் ராஜசேகரன் எத்தனை பேருக்குதான் வாழ்க்கை கொடுக்க முடியும்?
கவிதா:என்ன பேசுறிங்க அவர் குழந்தையை நான் என் வயிற்றில் சுமக்கிறேன்.
தார:எத்தனை பேர்தான் வந்து இப்படி வாழ்க்கை பிச்சை கேட்பிர்கள்(கேவலமாக பேசுகிறாள்)
கவிதாவின் மனதில் ஒன்று மட்டும் இப்போது நன்றாக புரிந்து விட்டது...........
"ராஜசேகரனிடம் ஏமாந்தது நாம் மட்டுமில்லை இன்னும் நிறைய பெண்கள்)
தாரா:நீ வருவதற்கு கொஞ்சம் முன்னால் தான் ஒருத்தி வந்து உன்னை மாதிரி பேசி நான் பணம் கொடுத்து அனுப்பி விட்டேன் உனக்கு எவ்ளோ வேணும் என்றாள்....
எனக்கு பணம் தர நீங்கள் யார் என்று கவிதா கேட்டாள் ?
"நான் தான் ராஜசேகரன் அத்தானை திருமணம் செய்து கொள்ளபோகிறேன்" என்று கூறி சிரித்தாள்........
அதிர்ச்சியுடன் பார்த்தாள் கவிதா......

எழுதியவர் : (25-Nov-13, 12:31 pm)
பார்வை : 254

மேலே