குழந்தை தொழிலாளி

மனிதாபிமானமற்ற,
சமுதாய வயிற்றில்,
பொறுப்பற்ற,
பெற்றோர் விதைத்த,
வறுமை கருவே,
குழந்தை தொழிலாளர்கள்,

ஒட்டு போட,
வயதை நிர்ணயித்து,
உழைக்கும் வயதை,
நிர்ணயிக்க மறந்த,
சமுதாய குறைபாடு,
குழந்தை தொழிலாளர்கள்,

கல்வி கடவுள்,
சரஸ்வதிக்கும்,
கருணை இல்லை,
இவர்கள் மீது,

வறுமையை எதிர்த்து,
தினம் தினம்,
போராடும்,
இவர்கள்,
குழந்தை தொழிலாளர்கள்,
அல்ல,
குடும்ப தலைவர்கள்,

இவர்களில்,
அப்துல் கலாமும் உண்டு,
சச்சினும் உண்டு,
ஆனால் சரித்திரத்தில்,
இவர்கள் திறமை,
மட்டும்,
இடம் பெறாது,

உழைக்கும் நேரம்,
போக,
ஒரு மணி நேரமாவது,
கல்வி கற்க,
இவர்கள்,
தயார் தான்,
கற்று தர,
நாம் தயாரா?

உடல் வலிமை,
உள்ளவனும்,
பிச்சை எடுக்கும்,
பூமியிலே,
பிள்ளைகளாய்,
இருந்தாலும்,
உழைத்து,
குடும்பத்தை,
கரை சேர்க்கும்,
இவர்களை,
இந்த நாடே,
வணங்க,
கடமை பட்டுள்ளது ,

நாம் போகும்,
உணவு விடுதி,
பூங்கா,
கடற்கரை,
எல்லா,
இடங்களிலும்,
குழந்தை தொழிலாளி,
எனும்,
தெய்வங்கள்,
நிறைந்து தான்,
இருக்கிறார்கள்,
ஆனால்,
நாம் தான்,
கடவுளை கண்டும்,
காணாமல்,
வந்து கொண்டு,
இருக்கிறோம்,

பிஞ்சு விரலை.
பிடித்து,
பழக்காமல்,
இரும்பு கம்பியை,
சுமக்க பழக்கினோம்,

நல்ல கல்வி,
வறுமையை ஒழிக்கும்,
ஆனால்,
இவர்களுக்கு,
வறுமை,
நல்ல கல்வியை,
கிடைக்காமல்.
செய்தது,

எல்லாம் மாறும்,
என்ற,
நம்பிக்கை மட்டும்,
தான்,
அவர்கள்,
நெஞ்சினில் இப்போது !!!

எழுதியவர் : கார்த்திக் (25-Nov-13, 6:07 pm)
பார்வை : 370

மேலே