சின்ன திரை

சின்ன திரை
இது வெள்ளி திரையின்
மைக்ரோ செராக்ஸ்
நம் நேரத்தை
நமக்கே தெரியாமல்
திருடி விடுகிறது
கதையின் பலம் மறந்து
சதையின் பலத்தில்
வாழ்கிறது
நம் மனதில்
கொட்டி விடுகிறது
சில காமக்குப்பைகளை!
விரசங்களே
விற்பனை
செய்கிறது
சரித்தரத்தை
புரட்டிய சக்தி
இன்று
சோம்பேறிகளை
உருவாக்கிக்கொண்டு
குடிப்பதை மட்டும்
பார்வைக்கு தருகிறது
ஆடை விரித்து
காட்சி வைக்கிறது
ரகசியம் காத்தல்
காதலின் சுகம்
இங்கோ
கள்ளகாதல் அம்பலமாய்
கம்பனும்
பாரதியும்
ஆட்சி செய்த திரையில்
போலி வத்யாசனார்கள்
வகுப்பு எடுக்கிறார்கள்
உந்தன் திரையில்
மாமியாரும்
நாத்தனாரும்
எப்போதும்
வில்லிகள் தான்
குடும்பம்
என்றால்
நான்கு தங்கை
ஒரு தம்பி
என்ன கோட்பாடோ ?
உண்மை சொல்கிறேன்
என்று
கூவிகூவி விற்கிறீர்
நடுநிலை
என்பது
யாருகென்றே
தெரியாமல்
சின்ன திரை
மனதை சின்னதாக்கி
சிற்றின்பத்தில்
முழ்கடித்து விட்டிர்கள்
உங்களக்கும்
வேண்டும்
ஒரு
தணிக்கை குழு
ஆயினும்
மின்மினியின் வெளிச்ச
துகளாய்
சில
வெளிச்ச கிற்றுகள்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
கிரகணம் விடும் காலம்
தொலைவில் இல்லை
மீண்டும்
நல்ல வெளிச்சம் வரும்
நம்புவோம் !!!!!!!!!!