நான் கண்ட கனவு
சாலையின் ஓரத்தில் புதித்தாய் பூத்த மரம் !
காற்றின் இசைக்கு இதழ் இசைக்கிறது - இழைகள்
சூரியன் வெளிச்சத்தில் கிளைகள் கண்ணாமுச்சி விளையாடுது.
திடிர் என மெளனம்....என்ன அயிற்று அதற்கு !
தூரத்தில் ஒரு அழகு வானவில் நடந்துவருகிறது...
இல்லை...இல்லை...இசையுடன் மிதந்து வருகிறது !
என்ன சிந்தன்னை செய்திற்கும் அந்த மெளனம்....?
சிலை வருகிறதா இல்லை....பகல் நிலா உலா வருகிறதா என்றா ? - இல்லை,
பூமி எப்போது இடம் மாறியது...சொர்க்கத்திற்கு என்றா ? - இல்லை,
நட்சத்திரம் எல்லாம் ஒன்றாய் உடை அணிந்து வருகிறதா என்றா ? - இல்லை,
வண்ண பூக்களின் சாரல் வருகிறதா என்று !!!
மெளனம் கலைந்தது...என்ன செய்யா போகிறது.....
காற்றை கலைத்து கிளைகள் கை தட்டின....வருகைக்காக
இழைகள் புன்னகையூடன் உதிர ஆரம்பித்தது....
அழகு மயிலின் வெண் பாதத்தை முத்தம் யிடவோ !
மணி அடித்தது .... கடிகாரத்தில்!
கண் விழித்துக் கொண்டது...உறக்கத்தில் இருந்து.
மனம் என்னவோ இன்னும்...கனவுடன் தான் இருந்து.
கிளைகள் ஆக என் கையும், இழைகள் ஆக என் இதழ்யும்..
இ௫ கைக்குள் அனைத்து பச் என்று இச் த௫வது போல்
கனவு உ௫மாறிக்கொண்டு இ௫ந்தது - எனக்குள்.