காதலின் வலி

மாலை நேரம் அழகாக பூக்குதே
மனதோடு வேதனை தாக்குதே
நிலவே......!
உந்தன் ஞாபகம் நெருப்பாய் என்னை எரிக்குதே
விழிகளில் துளியும் வழியுதே
இமைகளும் தீயில் கருகுதே
உயிரும் மெழுகாய் உருகுதே .................!

தனியாய் நான் நடக்கிறேன்
தனிமையில் தினம் இறக்கிறேன்
என்னையே நான் வெறுக்கிறேன்
எல்லாம் உன்னால் தானே பெண்ணே...........!

எங்கே நீயும் இருக்கிறாய்
இங்கே என்னை அழ்கிறாய்
உன் நினைவால் என்னை கொள்கிறாய்
நிஜமாய் சொல்லடி கண்ணே.................!

என் காதலும் உண்மைதான்
என் காதலியும் உண்மைதான்---ஆனால்
என்னை காதலித்த
என் காதலியின் காதல் தான் பொய்யோ.............!

எழுதியவர் : சு.சங்கத்தமிழன் (27-Nov-13, 2:49 pm)
சேர்த்தது : சு சங்கத்தமிழன்
Tanglish : kathalin vali
பார்வை : 205

மேலே