தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

கால் நூற்றாண்டுக்கு முன்பு வாஸ்து என்ற வார்த்தை
நம்மில் பெரும்பாலோர் கேட்டறியா நிலையில் இப்பொழுது
எங்கும் வாஸ்து எதிலும் வாஸ்து; பொங்கும் வாஸ்து சிலர்
பிழைப்பதற்கும் வழிகாட்டும் வாஸ்து. வாஸ்த்து வாஸ்த்து அறிஞர்களின் “தோஸ்த்து”! எண்கணித ஜோதிடமும் அப்படித்தான் முகவரியின்றிக் கிடந்தது. இன்றோ அதில் நம்பிக்கை கொண்ட பிரபலங்கள்கூட தம்பெயரில் எழுத்துச் சீர்தீருத்தத்தில் எழுச்சி கொண்டு மாற்றங்கள் செய்கிறார்.
வாஸ்த்து பார்த்துத்தான் வர்த்தகம் மனையரங்கம் எல்லாமே.
வாழ்வியின் வழிகாட்டியாய் வடிவம் கொண்டது வாஸ்து.

பதிமூன்றாம் எண்ணுக்கு அஞ்சி அதைப் பதிமூன்று-ஏ என்று மாற்றி அச்சத்தைப் போக்கிக் கொள்ளுவதும், பதினேழு என்பதை எண்கணிதப்படி கூட்டினால எட்டு வருகிதாம். “எட்டு குட்டிச் சுவராக்கிவிடும் என்று அஞ்சி அதை மாற்றுவார் பதினேழு-ஏ என்று.

அச்சம் காரணமா? இல்லை அதிர்ஷ்டம் வருமென்றா?
தெரிந்தவர்கள் சொல்லுங்கள் அறியாமை இருளில் தவிப்பவர்கள் தெரிந்து தெளிவு பெறட்டும்.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (28-Nov-13, 8:43 am)
பார்வை : 243

மேலே