நிழல் தேடும் பறவைகள்

ஓடி, ஆடி விளையாட
உயர பறந்துவிட்டு ஓய்வெடுக்க
மரங்கள் இல்லையே .....
யாரை குத்தம் சொல்வது
நம்மை படைத்த ஆண்டவனையா?
இல்லை
ஆறரிவு படைத்த மனிதர்களையா?
கொடிபிடித்து போராட கட்சியும் இல்லை
சாலை மறியல் செய்ய
நம்மவர்க்கு ஜாதி சங்கமும் இல்லை
நமக்கு தெரிந்ததெல்லாம் சமத்துவம்தானே
மனிதர்களே..மரங்களை வெட்டும்முன் சற்று
சிந்தியுங்கள்.
இன்று அழிக்கபடுவது எங்கள் இனம்
நாளை ?????????

எழுதியவர் : rambala (28-Nov-13, 10:41 am)
பார்வை : 115

மேலே