முதுமையின் ஆசை
மீண்டும் வேண்டும்
நிலாச்சோறு...மீண்டும் வேண்டும்
அடிக்கடி அடி...மீண்டும்
வேண்டும் ஆரஞ்சு மிட்டாய்ப்பங்கு ...
மீண்டும் வேண்டும் திருட்டு
மாங்கைச்சுவை..மீண்டும் வேண்டும்
ஒரு காதல் கவிதை...
மீண்டும் வேண்டும் இன்பச்சுவை...
மீண்டும் வேண்டும் உரிமை...
மீண்டும் வேண்டும் சுமக்கும்
சுமை...மீண்டும் வேண்டும்
கொஞ்சும் அருமை..மீண்டும்
வேண்டும் மூக்குக் கண்ணாடி...
மீண்டும் வேண்டும் இது
போல் இறுதி கவனிற்புக்காகவே
ஒரு முறை மறுபிறப்பு...