தன்னிலை மறந்த நிலை
தன்னுள் இருக்கும் உயிரை
கண்ட உற்சாகத்தில்
என் இதயம்
தன் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கிறது..!!!
கருவிழிகளும் ஆனந்தத்தில்
அங்குமிங்கும் அலை மோதின
பின் சரணடைந்தன உன் விழிகளுக்குள்.!!!
அதனை மீள செய்ய
போராடிய என் இதயமும்
உன் விழிகளிடம் தோற்றது ..!!!
கை விரல்களும் கட்டுபாட்டை இழந்து
தங்களுக்குளே போர் புரிகின்றன
உன் விரல் பிடிக்க வேண்டும் என..!!!
நிலத்தில் புதைந்திருக்கும் கால்களும்
நிலை இல்லாமல் நின்ற இடத்திலேயே
நிலவை எட்டும்
தூரம் வரை பறக்கின்றன..!!!
உன் தோல் சாய்ந்து
நடக்க வேண்டும் என
இவை எல்லாம்
நீ என் எதிரில் இருக்கும் போது
ஏற்பட்ட நிலை அல்ல
கண்ணுக்குள் இருக்கும் உன்னை
கற்பனையில் கண்ட போது
ஏற்பட்ட தன்னிலை மறந்த நிலையே ..!!!