பிச்சை துளிப்பா
நிம்மதியான ஏழை
மாற்றான் உழைப்பில்
பிச்சைக்காரன்.
*/*
கையேந்தாத பிச்சைக்காரன்
ஏழைகளின் செல்வத்தில்
அரசியல்வாதி.
*/*
பஞ்சம்
திருடப்படும் சிந்தனையாளன்
கவிஞன்(?)
*/*
குடிமகன்
போதைக்கு பிச்சையெடுக்கிறது
தமிழக அரசு.
*/*
ஐயா !! சாமி !!
வாக்குசாவடிகளுக்கு முன்
இலவசத்திற்கு அடிமாடுகள்.
*/*
ஈழத்தின் ஆவிகள்
தர்மம் தலைகாக்கும்
வாக்கு வங்கி.
💦