நீ அகப்பட்டாய்”

”வீட்டிலே என் மனைவி எப்போதும் தகராறு செய்கிறாள்.நிம்மதியே இல்லை, ”என்று ஒருவன் நண்பனிடம் புலம்பினான்.

நண்பன் சொன்னான், ”அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திட்டினால் அடுத்தவள் வீட்டிற்கு போய்விடுவேன். எனக்கு அதனால் எந்த பிரச்சினையும் இல்லை.

”இவனும் இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று நினைத்து இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டான்.இதை அறிந்த முதல் மனைவி அவனை வீட்டை விட்டு துரத்தி விட்டாள். உடனே இரண்டாவது மனைவியிடம் சென்றான். ஏற்கனவே திருமணம் ஆனதை சொல்லாமல் இவளைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிந்து இவளும் அவனை வீட்டிற்குள் விடவில்லை.

அவன் இப்போது நடுத்தெருவில்.புலம்பியபடியே அவன் கோவிலுக்குப் போய் அங்கு ஒரு ஓரமாகப் படுத்தான். அப்போது பக்கத்தில் ஒருவன் புலம்பிக் கொண்டிருந்தான். உற்றுப் பார்த்த போதுதான் அவன் இவனுடைய நண்பன்தான் என்று தெரிந்தது.

”என்னடா,நிம்மதியா இருந்த நீயும் இங்கே இருக்காயே?”என்று கேட்க அவன் சொன்னான்,”என்னையும் இரண்டு பேரும் வெளியே அனுப்பி விட்டனர்,”என்றான். ”பின் ஏன் எனக்கு அந்த ஆலோசனை சொன்னாய்?”என்று இவன் கேட்க அவன் சொன்னான்,”நான் அடிக்கடி பிரச்சினை காரணமாக இங்குதான் வந்து படுத்திருப்பேன்.

எனக்கு தனியாகப் படுத்திருக்க பயமாக இருப்பதால் துணைக்கு ஆள் தேடினேன். அப்போதுதான் நீ அகப்பட்டாய்.”

# சிக்கிட்டான்டா சேகரு..

படித்ததில் பிடிப்பு
நன்றி மயூரன் தளம்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (29-Nov-13, 8:26 am)
பார்வை : 87

சிறந்த நகைச்சுவைகள்

மேலே