தோல்வின் கடைசி படிகளில்

நான் தோல்வியை
தழுவியபோதெல்லாம்
நீ என்னோடு ......

என் தோல்வியை
கண்டு ரசிக்க அல்ல
என் முயற்சியை பாராட்ட......

ஏளனமாக என்னை
பார்த்தவர்கள் முன்
என்னை தோற்கடித்த
தோல்விகளை இன்று
நான் தோற்கடித்து .......

இன்று நீ என்னோடு
வெற்றியை கொண்டாட ...

நான் இன்று
தோல்வின் கடைசி படிகளில் ..........

என்னோடு இருந்தது
யார் தெரியுமா
தன்னம்பிக்கை ........

எழுதியவர் : காதலின் காதலன் (29-Nov-13, 3:31 pm)
பார்வை : 97

மேலே