வீழ்வதும் இன்னொன்று உயர்வதற்கே
துளிராகி
இலையாகி
பழுத்து
சருகாகும்வரை
எனைத் தாங்கிய
நீண்ட மரத்திற்கு
ஒரு குடம் தண்ணீர்
வார்த்ததில்லை நீ..!
கடும் புயலில்
சருகாகி நான் உதிர
வாய்விட்டுச் சிரிக்கின்றாய்
அகந்தையால் மனிதா நீ .....
உன் வாழ்நாளை மறந்து......!
சருகான என்னை எருவாக்கி
இன்னொரு விதையை
முளையாக்கி
பூத்துக் குலுங்கும் மரமாக்கி
நிமிர்ந்து நிற்கவைக்கும் சக்தி
என்னிடமிருப்பதை
நீ மறந்ததுதான்
ஆச்சரியம் மனிதா......!!!