என்னோடு அவன்

பெரும் காற்றாக உரச செய்
உதடுகளில் மட்டுமின்றி உள்ளத்தில் உறைய செய்
உண்மையாக யாவற்றையும் நீயே செய்
உள்ளம் கனிந்த பேச்சுக்களில் இவை யாவும் செய் !

பனி காற்று என்னுள் வீச செய்
பனி மழையில் நனைய செய்
குற்றம் ஏதும் இருப்பின் மன்னிக்க செய்
உலகம் முழுதிலும் நம் காதல் விதைகளை முளைக்க செய் !

உனக்காக எப்போதும் என்னை நேசிக்க செய்
என்னையே என்னை மறக்க செய்
உலகம் அழியும் நிமிடத்திலும் உன்னுள் என்னை புதைக்க செய்
தோழா உன் அன்பு விதைகளை என்னோடு முளைக்க செய்!

எழுதியவர் : மாதவன் (30-Nov-13, 10:14 am)
Tanglish : ennodu avan
பார்வை : 185

மேலே