என் காதல் தேவதை
அன்றொரு நாள் என் தேவதையை கண்டேன்
பார்த்த கணமே என் இதயத்தை தொலைத்து விட்டேன் என்னவளிடம்
அவள் மௌனத்திலும் அவள் கண்கள் பேசும்
அவளின் கூர்மையான பார்வை என் மீது காதல் அம்பாய் தொடுத்தது
என்னவளின் சிரிப்பினிலே பித்தனானேன்
எனது தேவதையின் அழகிய முகம் கண்டு
நான் என்னையே மறந்தேன்
எங்கும் என் தேவதையின் பிம்பம் பிரதிபலித்தன.
அன்று விழுந்தவன் தான்
இன்று வரை மீள முடியவில்லை
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும்
என் காதல் தேவதையின் நினைவிலேயே!!!!
-வர்ணா

