வெண்ணிலவு
இருளின் ஒளிமயம்
இரவின் அதிசயம்
வளர்வதும்
தேய்வதும்
ரகசியம்!
கவிஞனுக்கு இவள் மிக மிக அவசியம்...
இரவு நேர தாலாட்டு
இன்னல் தீர்ப்பாள்
நம் மனந்தொட்டு ..
கொஞ்சும் மழலையானேன்
கெஞ்சும் மடந்தையாநேன்
ஏதோ உன் பார் காதற் கொண்டேன்
அதனால்
என்னுள் கவிதைகள் பல ஊறக்கண்டேன் ..
உன்னுள் உறைய வைத்தாய்
உலகை ரசிக்க வைத்தாய்
வாழ்வின் உண்மை அர்த்தம்
அறிய வைத்தாய்..
நான் என்றென்றும் உனதாய்..