குமரியின் எசப்பாட்டு எதிர் பாட்டு------அகன்
வானம்
அவ்வப்போது எழுதும் சிறுகதை
மழை
எப்போதாவது
புயல்...
குமரி: வானம்
எப்போதும் கோபம்
சூரியன்..!
எப்போதாவது புன்னகை
மழை..!
காடு
அவ்வப்போது படைக்கும் கவிதை
மலர்
எப்போதாவது காப்பியம்
காட்டுத் தீ ...
குமரி: காடு
எப்போதும் சலசலப்பு
அருவிகள்..!
அவ்வப்போது அதிரும்
எரிமலை..!
கடல்
அவ்வப்போது வரையும் கோடுகள்
அலைகள்
எப்போதாவது ஓவியம்
சுனாமி.....
குமரி: கடல்
எப்போதும் மீன்கள்
வரவு..!
அவ்வப்போது சூறாவளி
செலவு..!
எழுத்து
அவ்வப்போது வாழ்வது
சொற்களில்
எப்போதாவது பெருவாழ்வு
கவிதைகளில்
குமரி:எழுத்து
எப்போதும் இனிப்பு
கருத்து..!
அவ்வப்போது கசப்பு
விமர்சனம்..!