அவளும் அவனும்

அவள்
வண்ணத்துப் பூச்சியின் சிறகசைப்பில்
லயித்துக் கிடக்கிறாள்...
அவன்
அவளின் இமைகளின் அசைவில்
பட படத்துக் கொண்டிருக்கிறான்.

அவள்
வானவில்லின் நிறங்களை
வாய் பிளந்து ரசித்துக் கொண்டிருக்கிறாள்
அவன்
அவளின் ஒற்றைச் சடைப் பின்னலில்
கட்டுண்டு நிறமிழந்து நிற்கிறான்

அவள்
கண்கள் திறந்து வாழ்வை ரசிக்கிறாள்...
அவன்
அவளைப் பற்றிய
அதீத கனவுகளில் சஞ்சரிக்கிறான்

அவள் காதலித்துக் கொண்டிருக்கிறாள்...
அவன் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறான்.

எழுதியவர் : ராதா (2-Dec-13, 8:19 am)
Tanglish : avalum avanum
பார்வை : 201

மேலே