பிறப்பதும் மடிவதும் நிர்ணயமே
வாடின பூ என்னிடம் சொன்னது
என் என்னை பார்த்து ஒதுங்குகிறாய் என்று?
நான் வதங்கிப் போனேன் என்று தானே ?
நான் சருகாகிப் போனேன் என்று தானே ?
நான் பொலிவிழந்து கிடக்கிறேன் என்று தானே?
நான் பதிலுரைக்கும் முன்
மீண்டும் பேசியது அழாக் குறையாக
நேற்றுக்கு முந்திய நாள் நான்
ஓர் அழகான மொட்டு விரிய காத்திருக்க
விடியும் முன் மெல்ல விரிந்து விட்டேன் நேர்த்தியாக
நேற்றைய தினம் அ ன்றலர்ந்த மலராகத் தோன்றி
கண்டோரும் காணப் போவோரும் வியந்து மகிழ
மெலிந்த காம்பிலே மொட்டவிழ்த்து மனம் பரப்பினேன்
தென்றல் காற்றிலே அசைந்து ஆடி இதமாகத் தவழந்தேன்
என் அழகிலே நானே மயங்கி னேன் அன்று போதும் முழுமையாக .
இன்று நான் ஆகாமல் தரையில் விட்டேறியப்பட்டுள்ளேன்
என் நிலைமை கண்டு உனக்கு ஏளனமோ!
வாழ்வே இது தான் புரிந்து கொள் மானிடனே !
இன்று இருப்பது நாளை இல்லை யாவும்
மனிதனும், பொருளும் பிறந்து மடிவது நிர்ணயமே