வெற்றுக் காகிதம்
வெற்றுக் காகிதம் போல் மனம்
வெள்ளையாய் பிறந்தேன்
பல வர்ண மை கொண்டு
உங்கள் எண்ணங்கள் வரைந்தீர்கள்
உங்கள் வர்ணங்களால் தான்
நான் ஒளிர்கிறேன் என்றீர்கள் !
எனக்கு ஒரு யானையை ஆசை
நீண்ட தும்பிக்கையும் முறம் போல்
வீசும் காதுகளும் இடுங்கிய
கண்களும் பருத்த உடலுமான
ஒரு கருத்த யானையை
வரைய ஆசை – நீங்கள்
இறைத்த வர்ணங்கள் மாய்த்து !