என்னவோ எழுத 5

என்னவோ எழுத...5

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...?! ன்னு

பாட்டு ஒண்ணு கேட்டேன் மச்சான்...
ஏன் இப்படி நொந்து புலம்புறாகளோ
எனக்கொண்ணும் புரியல மச்சான் ...

நானுந்தான் கேட்டேன் புள்ள
நாலெழுத்துப் படிச்சவக சிலபேரு
நாட்டுல ஒழுக்கங் கெடத்தான்
நடக்குறாக புள்ள
அதனால தான் புலம்புறாக ...

அப்படி என்ன ஒழுக்கங் கெட
நடந்துகிட்டாக விவரமா சொல்லு மச்சான்..

அட போப்புள்ள ..என்னத்த சொல்ல..
கண்ணாலம் கட்டி
பொண்டாட்டியா வந்த மகராசிய
ஒட்டுத் துணியில்லாம படம் பிடிச்சி
ஊருக்கே காட்டுதாகளாம்...
புருஷபொஞ்சாதி கூடிகுலாவுற சந்தோஷத்த
பொஞ்சாதிக்குத் தெரியாம
வீடியோ படம் பிடிச்சி
காசுக்கு விக்கிதாகலாம்(விற்கிறார்களாம்)

ஐய்யய்யோ!!!இப்பிடியெல்லாம
செய்வாகலா மச்சான்...ச்சீச்சீ...தூஊஊஊ!!

அட ..இருபுள்ள ...
இன்னும் சொல்லுதேன் கேளு...

வெளிநாட்டுல வேலையின்னு
ஆசைகாட்டி கண்ணாலம் கட்டி
அருமபொஞ்சாதிய ஆபீசருக்கு
கூட்டிக் குடுக்குறாகளாம்...

நம்மூருலே சுத்துற படிச்ச பசங்களும்
நண்பனுங்க கிட்ட பொஞ்சாதிய
நயவஞ்சகமா படுக்க அனுப்புதாகலாம்...

நல்லாதான் வாயில் வருது மச்சான்...தூஊஊஊ
ஆம்புளைங்கலே இம்புட்டுத்தானா மச்சான்...

பொம்புளைங்களும் இப்ப குணத்துல
மோசமாகிட்டு வராங்க புள்ள..
புருசனுக்குத் தெரியாம
ஆபீசருக்கிட்ட பழகி படுக்குறதும்
புருசனோட சேக்காளியொட சேர்ந்து
ஊரச் சுத்தி ஒடம்ப கொடுக்குறதும்
இன்னும் என்னென்னவோ
தப்பு தண்டா செய்தாகலாம் புள்ள
நாலெழுத்துப் படிச்ச நாகரிகபோதையில...

அம்மாடீடீடீ...
பசங்கல படிக்க அனுப்பவே
பயமாயிருக்கு.... ஒழுக்கத்துல
பாதை மாறிடுவாங்கலோ மச்சான்...

அப்படியெல்லாம் சொல்லாத புள்ள
நாலெழுத்துப் படிச்சவக தான்
நாட்டு நடப்ப வெளிச்சம் போட்டுக்காட்டுதாக
நாலும் தெரிஞ்சவங்களா ஆக்கி
நமக்குள்ளே இருக்க மிருகஇருட்டப் போக்குதாக...

சரிதான் மச்சான்...இருந்தாலும்....

ஒருபானை பாலுல கொஞ்சமா விசம் சேர்ந்தாலும்
ஒருபானை பாலும் வீணாகிடுமே புள்ள...
மனுசங்கள்ள சிலபேர் கூட
ஒழுக்கங் கெட்டுத் திரியலாமோ சொல்லு...
அதனால தான்
ஒழுக்கங் கெட்டுத் திரிஞ்சா
ஊர்உலகம் காரித்துப்பும்...
படிக்கிற படிப்பு அறிவ வளக்க மட்டுமில்லாம
பண்போட குணத்துல ஒசந்து
ஒழுக்கத்த உசுரா மதிச்சி வாழனுமுன்னு
புத்தியில
ஏத்துறதுக்குத் தான் புலம்புறாக...

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...?! ன்னு

.... நாகினி

எழுதியவர் : நாகினி (2-Dec-13, 6:13 pm)
பார்வை : 66

மேலே