முழு விழிப்புணர்வு

பேரரசன் ஒருவன் வயோதிக காலத்தில் தன் மகனுக்கு முடி சூட்ட விரும்பினான். அவனுடைய மகனும் ஓர் அரசனுக்குத் தேவையான அணைத்து வித்தைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்திருந்தான்.
ஒரு நாள் அந்த அரசன் தன் மகனை அழைத்தான்.
"மகனே, ஓர் அரசனுக்குத் தேவையான அனைத்து வித்தைகளையும் நீ கற்றுத் தேர்ந்திருகிறாய்.
ஆனாலும் நீ கற்க வேண்டிய வித்தை ஒன்றேயொன்று பாக்கியிருகிறது. அதைக் கற்காதவரை நீ என் மகனாயிருந்தால் கூட உனக்கு முடிசூட்டும் அதிகாரம் எனக்கில்லை.
எனவே நான் சொல்லும் குருநாதரிடம் சென்று, அந்தக் கடைசி வித்தையும் கற்றுவிட்டுத் திரும்பு" என்று சொல்லி, ஓலை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தான்.
இளவரசன் அடர்ந்த காட்டிற்குள் நீண்ட பயணம் செய்து, அந்த குருநாதரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தான்.
காட்டின் நடுவே சிறிய தோட்டம், எளிய குடிசை, கிழத் தோற்றத்துடன் குருநாதர்.
ஓலையை நீட்டிய இளவரசன், பணிவுடன் அவர் முன்னால் நின்றிருந்தான்.
"இதுவரை பெரிய பெரிய மேதைகளிடம் அரிய பல வித்தைகளைக் கற்றிருக்கிறோம். அவர்களிடம் எல்லாம் இல்லாத என்ன வித்தையை இந்தக் கிழவர் நமக்குக் தந்துவிடப் போகிறார்" இளவரசன் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
குருநாதரே ஓலையை பார்த்து முடிந்ததும் "சரி, சரி அந்த துடைப்பத்தை எடுத்து ஆசிரமத்தை பெருக்கு"
என்று சொல்லி விட்டு, வெளியே போய்விட்டார்.

---மலரும்----
குருநாதர் என் அப்படிச் சொன்னார்...?

எழுதியவர் : (2-Dec-13, 6:34 pm)
சேர்த்தது : கிசன்ராஜ் Nagaraj
பார்வை : 54

மேலே