தேர்வறைக் கிறுக்கல்கள்

தவறிப்போன மதிப்பெண்களுக்கு
தற்போதே மௌனஅஞ்சலி!
--------

இங்கே
கைகளும் கால்களும்
சிறுசிறு தாள்களும்
ரப்பர் உறைகளும்
நகலக மொழிகள்
நன்றாய் பேசுமே!
-----------------
நம் கல்விமுறை
சிங்கங்களைக் கம்பிச் சிறையில் அடைத்து
தும்பி பிடிக்கக் கற்றுத்தரும்
அறியாமை!
கழுகுகளைத் தங்கக்கூண்டில் பிடித்து
கொஞ்சக் கற்றுத்தரும் கிளிப்பண்ணைகள்!

---------------------------------------------

இந்த வகுப்பறைகள்
சுவடிகளில் படிந்த சுவடுகளை
சுவர்களுக்கு ஏற்றும்
நவீன நகலகங்கள்!

எழுதியவர் : (2-Dec-13, 8:07 pm)
பார்வை : 159

மேலே