என் எண்ணம்

அலை போதும் நேரம்..,
வாய்கால்கள் எங்கே போகும்...,
வழி பேச யாரோ...,
கை கோர்க்க வருவாரோ..!

நெடு நேர வானம்...,
தெளிக்காத நீரு...,
காய்கின்ற வாசல்...,
என் சாயல்தான் கோளம்...!

மன்றாடும் வார்த்தை...,
நின்றாலே போதும்...,
சண்டைகள் ஏதும்...,
தொடராதே இந்த பாதை...!

கண்ணுக்குள் காதல்...,
பெண்ணுக்குள் வந்தால்...,
நீற்காதே பூமி...,
ஏமாற்றம்தான் சாமி...!

தேனாக பாடல்...,
கேட்டாலே போதும்...,
ஆகாயம் சுருங்கும்...,
என் மடியிலே அதன்தூக்கம்...!

அன்போடு ஒரு வார்த்தை...,
அதன் பண்பிலே ஒரு பார்வை...,
கிடைத்தாலே ஆனந்தம்...,
உயிர் பிரிந்தாலும் பேரின்பம்...!

உப்புக்கல் உடைந்தாலும்...,
அதன் சத்துக்கள் மாறாது...,
வெட்டுக்கல் என்மீது...,
விழுந்தாலும் அழுவாது...!

காற்றோடு கைகோர்க்க...,
நேரங்கள் இருக்காதா...,
என்பாட்டோடு தமிழ்பேச...,
பனிகாற்று வீசாதா...!!?..?

எழுதியவர் : காந்தி . (2-Dec-13, 8:02 pm)
பார்வை : 144

மேலே