காதலா நட்பா

ஒவ்வொரு நொடியும் உன்னுடன் இருக்கவே தோன்றும் என் ஆசையை என்ன வென்று சொல்லுவது ??

மற்ற பெண்ணிடம் நீ பேசும் போது நான் ஏன் கலக்கம் கொள்கிறேன்..??

நீ என்னுடையவன் என்ற எண்ணத்தை மட்டுமே மனதில் கொண்டுளேன் ..

உன் முகம் பார்க்கும் போது என்னில் தோன்றும் சந்தோசத்துருக்கு அளவே இல்லை

உன் வாய் மொழி கேட்ட நொடியில் என் கண்ணில் தோன்றிய கண்ணீர் கூட மறைந்து விடும்

உன் அன்பில் நான் கரைந்து விட்டேனடா..

என் உயிருள் கலந்து விட்டாய்
நீ இல்லையெனில் என் உடலில் உயிர் இருந்தும் பயன் இல்லை..

இது காதலா இல்லை நட்பா என்று தான் தெரியவில்லை..

உன்னுடன் கைகோர்த்து நடப்பேன் உன் தோழியாக மட்டும் அல்ல உன் வாழ்க்கை துணையாகவும்..

எழுதியவர் : நான்சி வின்சென்ட் (2-Dec-13, 11:54 pm)
பார்வை : 216

மேலே