வானம் வசப்படும்

வல்லூறுகள் இடை மறிக்குமேன்றோ_ வேடன்
வலைதனில் சிக்குவோமேன்றோ
வழியினை மாற்றி
வயக்காட்டிலேயே வாழ்வதில்லை பறவைகள்...

மனிதனாய்ப் பிறந்ததால்தான்
மரிப்போம் என்ற கவலையில்
மறித்துக் கொண்டிருக்கின்றோம்
மலர விடாமல் நம் கனவுகளை

நம் மீது நம்பிக்கை இல்லாத போதுதான்
நாளை பற்றிய அச்சம் வருகிறது...
எதிர்காலம் பற்றிய எண்ணத்தில்
எரித்துக் கொண்டிருப்பதென்னவோ நம் இலட்சியங்களைத் தான்...

காரணங்கள் சொல்வதற்கென்றே
காரியத்தில் இறங்காதே...
கண்களுக்கு வலிக்காமல்
கனவுகள் வேண்டுமானால் காண முடியும்..

உன் வேகத்தை அதிகமாக்கு
உயரங்கள் ஒன்றும் பெரிதல்ல...
தொட்டு விடும் தூரம்தான்
தொலைதூர வானமும்..

வானவில்லை வளைப்போம் என்று
வார்த்தைகளில் நாம் காட்டும் தீவிரம்
வாழ்கையிலும் இருந்தால்
வானம் உன் வசப்படும்...

எழுதியவர் : kiswar (3-Dec-13, 4:46 pm)
பார்வை : 199

மேலே