ஆவதும் பெண்ணால் ஆவதும் பெண்ணால்

பெண்ணாய்ப் பிறந்ததில்
பெருமிதம் கொள்கிறேன்...!

விடியலின் வெளிச்சத்தை
விழிகளில் படைக்கிறேன்...!

என்னால் முடியும்
என்றே ஜெயிக்கிறேன்....!

எதற்கும் துணிந்தே
என் நெறி வைக்கிறேன்....!

தீபத்தை வைத்து
ஒளியைப் பெறு நீ......!

தீ என என்னை
சொல்வது விடு நீ.....!

கொல்வது தீ
வெல்வது பெண்

கொள்வது தீ
கொள்வது பெண்

தீயினால் நீயும்
கருகிப் போகிறாய் - பெண்

தீண்டினால் நீயும்
கவிஞன் ஆகிறாய்

எனவே

ஆவதும் பெண்ணால்
ஆவதும் பெண்ணால்...!!

அழிவதும் என்று நீ
அடுத்த வரி சொன்னால்...

அஹிம்சையையே பழக்குவேன்
அழகான பெண் நான்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Dec-13, 4:50 pm)
பார்வை : 96

மேலே