என்னவே எழுத 6

என்னவோ எழுத...6

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே..?! என்று

புலம்பத் தான் வைத்துவிட்டாய் மனிதா
எழுத்தாணி நான் நொந்து ... செந்நீர்
சிந்தும்படி குறைவிலா குற்றம் புரிந்து
பகுத்தறிவில் தாழ்கின்றாய் மனிதா...

காதலனோடு வாழ்வதே உயர்வென்று முடிவாய்
பெற்றோரை உதறி வீட்டைவிட்டு... ஓடியபின்
பெற்றோர் உயிர்மானம் பெரிதென்று உதறுகிறீர்
கட்டிய காதல் கணவனை...

உயிரேயென ஒருமனதாய்ச் சொல்லும் மறுகணமே
வேறொரு காதலியைப் பிடிக்கின்றீர் ...பெற்றோர்
பேசிமுடிக்கும் ஒருபெண்ணை மகிழ்வோடு மணந்து
பணம்பெரிதென கைகழுவுகிறீர் காதலியை...

சிந்தையில் உறுதியான தெளிவில்லை மனங்கொண்ட
காதலிலும் தீர்க்கமான வலுவில்லை...பண்பிழந்து
முன்னுக்குப் பின் முரணாக வாழ்ந்திடவோ
கற்கின்றீர் உயர் கல்விதனை...

சொல்ல இயலா நும்கொடுமைகள் பலவற்றைச்
சொல்லில் தீட்டித்திட்டி வெளிப்படுத்தும்...என்போன்ற
எழுத்தாணிக்கு வேதனைதான் சந்திக்கு வந்த
குற்றங்கள் குறையாதது சோதனைதான்...

குற்றம் புரிந்தோரைச் சட்டத்தின் முன்நிறுத்தி
தண்டனைத் தீர்ப்பெழுதி முடிவதற்குள்...சிலபேர்
குற்றம் புரிந்தோராய் நிற்கும் வரிசைகண்டு
நொந்து புலம்புகிறேன் இவ்வெழுத்தாணி...

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே..?! என்று
.............
நொந்து புலம்பி அழிந்திடேன்
மனிதரை மனிதர் நோகச்செயும்
இழிவுகளைப் பெருகவிடேன்..
எழுதி எழுதி விரல்முனை ஒடிந்தாலும் ஓய்ந்திடேன்...
புலம்புவதை நிறுத்தி வீறு கொண்டெழுவேன்
குற்றங்களை முற்றும் ஒழித்திடுவேன்
என்ற நம்பிக்கையில்...

என்னவோ எழுத....எத்தனித்துப்

புலம்பியதை முடிக்கின்றேன் இத்தோடு
மனிதமற்ற வன்மக்களியாட்டம் தொடரும் பத்தோடு
பதினொருவராய் வாழ்கிறேன் நானும் பித்தோடு
செய்த பாவங்கள் ஒழியட்டும் இன்றோடு
மனதின் வன்மக்களையைப் பிடுங்கிடுவோம் கொத்தோடு...!!

....நாகினி

........................................ நன்றி ...................................

எழுதியவர் : நாகினி (3-Dec-13, 8:42 pm)
பார்வை : 79

மேலே