செல்லமே செல்லமே
![](https://eluthu.com/images/loading.gif)
நித்தம் எம்முடன் உறவாடும் செல்லமே !நித்திரையிலும் இணை பிரியா செல்வமே ...!!
செல்லும் இடமெல்லாம் உடன்வருவாய் தன்னாலே !
செல்லாத ஊருக்கும் பேசிடுவோம் உன்னாலே !
செல்லக்கிளியாய் கொஞ்சி மகிழ்வோம் சொல்லாலே!
செல்வத்தின் அறிகுறியாய் திகழ்வாய் கரங்களிலே !!
விடிந்ததும் உனைமுதல் தரிசிக்க விழியேங்கும் !
வழிதெரியா முகவரியும் நீயிருக்க வரமாகும் !
பொழுதுபோக்க நண்பன்போல் உடன் இருக்கும் !
பழுதாகிடில் சிறகொடிந்தாற்போல் உளம் தவிக்கும்..!!