தனிமை
சுவர்கள்.,சோபா செட் ,நைட் லாம்ப் ,இரண்டு பிளாஸ்டிக் செடிகள் ,
மெது மெது படுக்கை ,பாத்திரம் பண்டம் ,டிஷ் வாஷேர்
பிரிட்ஜ்,வாஷிங் மெசின் , பணம் ,
இவர்களுடன் நானும் பேசிக்கொண்டே இருகின்றேன் ,
எதுவுமே பேசாமல் என்னை முறைத்து பார்த்துக்கொண்டே இருக்கின்றன ....
பேசாமல் நானும் இவைகளை போல் ஒரு உயிர் அற்ற பொருளாக மாறிவிடலாம் என்று தோன்றியது ,
நல்ல பசி ...எனக்காக என்னவென்று சமைக்க ,
சரி ஜன்னல் ஓரம் உட்காந்து வேடிகையவது பாப்போம் ,
கைகோர்த்து சிரித்து பேசிக்கொண்டே செல்லும் தோழர்களைப் பார்க்க ,என் முகத்திலும் சிரிப்பு ,
என் தோழி தோழர்களை நிணைத்துக்கொண்டேன் ,
சரி தீபாவுக்கு போன் போடலாம் ,
தீபு நான் தான் எப்டி இருக்க ?
ஒரு மணி நேரம் ஓடிப்போனது ஹப்பா ,
சரி அம்மாவிடம் பேசலாம் , அம்மா சாப்டவே தோனல ,
ஒழுங்கா சாப்டு அப்போ தான வீட்ட பார்த்துக்க முடியும் ,
சரிமா .. ஒருமணி நேரம் சென்றது ,
சுத்தி இருக்கும் சுவர்கள் என்னை வெறிக்க பார்க்க
சிறிது நேரம் அதன்மேல் தலைசாய்த்து கண்மூடினேன் , முத்தம் ஒன்று கொடுத்து நான் உன் தோழி சரியா என்று கேட்டேன் ?
சரி என்று என்னை அரவணைத்தது போல் ஒரு உணர்வு ,
பேசிப் பழக ஒரு பேசா தோழி கிடைத்ததை நினைத்து எனக்கு நானே சமாதானம் கூறி ஏதோ ஒன்றை சமைக்க தொடங்கினேன் .....