யோசித்தால்யோசிக்க வைப்பவை 11

குரல் கொண்டு புரட்சி செய்வதைவிட
விரல் கொண்டு புரட்சி செய்

ஆயிரம் எண்ணமதை கொண்டமனது
அலைபாயாவிடில் அகிலம் வெல்லும்

சமாதியில் புதைக்கப்பட்டிருப்பது
சடலங்களே அன்றி சரித்திரங்களல்ல

ஆணவம் வென்று அகந்தையழித்து பார்
அழகிய பூமி உன் அருகில்

வாழ்க்கை காகிதத்தில் வசதியைமட்டும் கருவாக்கினால் பக்கங்கள் ஒன்றிரண்டுதான்

சிதைந்த வாழ்க்கைக்கு
சிதைமட்டும் தீர்வல்ல

வேதனையை விற்று மகிழ்ச்சியை வாங்குங்கள்
விற்பனையாகாத வேதனைகள் நிழல் போலதொடரும்

உணர்வை எழுத முடிந்த பேனாவால்
உணர்சியை எழுதமுடிவதில்லை

இறப்பு நேர்ந்திடில் இறந்துவிடலாம்
தினம் தினம் செத்து பிழக்காதீர்

வாடி உதிர்ந்த பூக்களைகூட கைநீட்டி தாங்கும் பூமி
தேடி தளர்ந்த உன்னை தாங்காதா

எண்ணஅலைகளுக்குள் எதிர்நீச்சல் அடிக்க பழகுங்கள் வசதியாகும் வாழ்க்கை

.................................................தொடரும்......................

எழுதியவர் : bhanukl (4-Dec-13, 8:20 am)
பார்வை : 176

மேலே