மின் பகிர் மனமே மின் பகிர்மானம்

நிகழ்ந்துப் போன
மகிழ் நினைவுகளின்
பரவசம்!
இறந்த
இளமைக்காலங்களின்
இனிமையும் உடன்
இணைந்தே வரும்
எதிர்கால
அறிவுறுத்தல்களும்!
மடி சாயும்
தலையினை
மனம் மகிழ
வருடும்
வசந்தமும்!
அன்றைய
நாள் முடித்திட்ட
வெளி உலக
அனுபவங்களும்
அல்லல்களும்
மனமாய்
பகிரப்படுகிறது
வீடுகளில்!!!
மின் தட்டுப்பாட்டுக் காலங்களில்.
இதுதான் மின் பகிமானமோ
பகிர் மனமே!!!

எழுதியவர் : aharathi (4-Dec-13, 9:11 am)
பார்வை : 57

மேலே