நன்றி தோழர்களே – கே-எஸ்-கலை

அன்புள்ளம் கொண்ட அனைத்து தோழமை உறவுகளுக்கும், நிர்வாக இயக்குனர்கள் உட்பட எழுத்து குழுமத்தாருக்கும், கே.எஸ்.கலை ஹேயேந்தினி தம்பதியரின் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகட்டும் !

எமது திருமணவாழ்க்கை செழிப்புற வேண்டி பல்வேறு வகைகளிலும் வாழ்த்துகளைக் கூறி எங்களை, அன்பால் அனைத்துக் கொண்ட உங்களுடன் மீண்டும் எழுத்தால் பேச வந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் !

முகம் தெரிந்த,தெரியாத உங்கள் அனைவரினதும் அகம் தெரிய வைத்த வாழ்த்துக் குறிப்புகள், விடுகைகள், தனிப்பட்ட படைப்புகள், தொலைப்பேசி அழைப்புகள் எல்லாம் எங்களை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றது என்பதை அதே நெகிழ்ச்சியுடன் கூறிக் கொள்ள விரும்புகிறோம் !

முரண்பாடுகள், மனக்கசப்புகள் காரணமாக தொடர்புகளை துண்டித்துக் கொண்டிருந்த உறவுகளின் மீள்வருகையும் வாழ்த்துகளும் பூரிப்படையச்
செய்தது என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை ! அவர்களுக்கு எங்களின் பிரத்தியேக நன்றிகள் உரித்தாகட்டும் !

உங்கள் அனைவரினதும் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, அந்த வாழ்த்துகளை பெருமைப்படுத்தும் வண்ணம் வாழ்வோம் என்று கூறி உங்கள் அனைவருக்கும் எங்கள் இருவரினதும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் தோழர்களே !

=================தொடர்வோம் தோழமையுடன் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (5-Dec-13, 1:48 pm)
பார்வை : 1426

மேலே