கால் நனைப்பு
ஆ...ஆ... மெல்ல முணங்களுடன் இறுகி மூடிக் கிடந்த இமைகளை திறக்க முயல்கிறேன். விண் விண் என்ற தெறிப்பினை உணர்ந்தபடி யாரோ என் இமைகளை மூடி தைத்து விட்டது போன்ற உணர்வுடன் மெல்ல மடல்களை விரிக்கிறேன். சில கண சுய சாதனைக்கு பின் நான் தற்போது ஒர் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். கட்டிலில் ஏதோ ஓர் கண்காடசி பொம்மை போல் கிடத்தப்பட்டுள்ளேன். என்னைச் சூழ அம்மா அப்பா. சுரேஸ் அண்ணா சுப்பு குட்டி எல்லோரும் கண் கலங்கிய படி நிற்கின்றனர். கைகளை இழுக்க முயன்று வலியுடன் எனக்கு சேலைன் ஏற்றப்பட்டுள்ளதை உணர முடிகிறது என்னால். அம்மா என்னருகில் கண்களை கசக்கியபடி வந்து கைகளை தடவிக்கொடுக்கிறாள். அப்பா என் தலைகோதி 'என்னம்மா' எனபது போல ஆறுதல் படுத்த முயல்கிறார்
தீடிரென ஹரி... ஹரி.... ஒனக்கு என்னாச்சு...??? யாரோ ஓர் ஆண் குரல்
என்னை தொட்டு எழுப்ப முயல்வதாக உணர்கிறேன்.
நான் பயந்து "அப்..பா... அப்பா.... யாரப்பா...எனக்கு பயமா இ...ருக்.குப்..பா அப்பா.." என அப்பாவை அணைத்து கொண்டேன்.
"இல்லம்மா......இல்ல நீ பயப்படாத நீ தூங்கு அப்பா இருக்குறே இல்ல.நா பாத்துகுறேன்" என்று அப்பா சொல்லிகொண்டிருக்கும் போதே
"என்ன ஹரிணி... என்னய ஒனக்கு தெரியலயா…..ஹரிணிம்மா என்னாச்சு ஒனக்கு...ஹரிம்மா.... “மீண்டும் அதே குரல்
சுரேஸ் அண்ணா குரலுக்கு உரிமையாளரை "வாங்க சார் நீங்க...அவங்கள டிஸ்டர்ப் பண்னாம..." என்று வெளியே அழைத்து செல்கிறார்.
"ஹரிணி என்ற ஒலி இப்போது தூரமாய் ஒலிக்கிறது.நான் மெதுவாக என் கண் மடல்களை மூடி அப்பா மடியில் தலைவைத்து கண்ணயர்கிறேன் பழைய நினைவுகளாய் நேற்றைய இரவை மீட்டிய படி....
"அப்பா அவரு நல்லா படிச்சவரு..உங்களுக்கு உங்க மக மேல நம்பிக்கை இருந்தா சரின்னு சொல்லுங்கப்பா...." என்று நான் என்னவன் நிமNலஷ்காக அப்பாவிடம் வாதாட அப்பாவோ தான் சாக போவதாக சொல்ல அம்மா எனை அடித்தபடி அழுது கீழே விழ திரைப்பட காட்சி போலானது.
நான் யாருக்காகவும் முடிவெடுக்க முடியாது போக என்னதான் தலைமைத்துவம் பற்றிய ஹென்றி மின்ஸ்பெர்க்கின் Disturbance Handler கொள்கையை ஆதரித்தாலும் தூக்க மாத்திரைகளை அள்ளி வாய்க்குள் போட்டேன்....
இன்று................
நிமலேஷ் உன்னய என்னால மறக்க முடியாது. இருந்தும் 22 வருஷம் கண் போல் காத்து வந்த பெற்றோர் என்று வாறப்ப உன்னய நா விட்டுக் கொடுத்துட்டேன் நிமலேஷ்....
பிரிவினால என் காதல் இன்னும் வலுவடைய கூடாது. அதால தான் இரவு பாதியும் தூங்காத உன் கண்கள பார்த்த பிறகும் நீ யார்னு கேட்டேன்..
நிமலேஷ் நம் காதல் உண்மை. உன்னய நா மறக்க முடியாம தவிக்கிறேன். இருந்தாலும் என்னய இந்த பாவிய நீ மறக்க முயற்ச்சிபாய்கிற நம்பிக்கையில தான் இந்த முடிவு...
மன்னிச்சிடாத நிமலேஷ் என்னய. இந்த ஹரிய மறந்துடு....!!!!
கண்களில் வழிகிற கண்ணீர் சொட்டுக்களை அப்பாவின் அன்புக் கரங்கள் துடைக்கின்றன.