மல்லிகையேமல்லிகையே

கரும்பலகையில் எழுதிய
கவிதை வரிகள் என
கன்னியவள் கூந்தலில் மணம்
கமழும் மல்லிச் சரம் சூடினேன்
மாலையில்..........!
பஞ்சுத் தலையணை அது
பல்லாங்குழி என மாறியிருக்க
வெள்ளைச் சோவி என அதனுள்
வீழ்ந்திருந்தது மல்லிகை மலர்கள்
காலையில்..........!
தொட்டு எடுத்தே
தோற்றவர் யார் ?
விட்டுக் கொடுத்தே
வென்றவர் யார் ?
கனவுகளுக்கும் வாசம் உண்டோ ?
காதலே நீ என்
கண் இமைகளுக்குள் விழிகள் நுகர....!
காதலே உன் உருவம் என்ன ?
கவனமுடன் இப்பொழுதும்
கண் மூடியே எனக்குள் தேடுகிறேன்...!!
கல கலக்குதே.......
அடடா......
அவள் வளையல்களின் இனிய சத்தம்........!!!!
அற்புதம் மீண்டும் மீண்டும் செவியினுள்ளே
அழகுக் கைகளின் மவுனச் சத்தம்....!!