லாக்கு - ஒரு வகையான சூதாட்டம்

லாக்கு - ஒரு வகையான சூதாட்டம்
விளையாட தேவையானவை :
1. மூன்று கோலி குண்டுகள் (2 கோலி குண்டுகள் ஒரே அளவானதும் 1 மட்டும் 2 ஐ விட சற்று பெரியதாக இருக்கவேண்டும் )
2. ப போன்ற வடிவத்தில் சுவற்றின் கீழ் கோடு கிழித்து , 2 சிறிய குண்டுகளை 5 அடி தூரத்தில் இருந்து ப வடிவிலான கட்டத்தில் தூக்கி போட்டு எதிராளி சொல்லும் (மேல் அல்லது எதிர் (கீழ் ))2 குண்டுகளில் ஒன்றை மூன்றாவது குண்டால் அடிக்க வேண்டும் , இப்படி சில வரைமுறைகள் உண்டு அப்படி அடித்தவர் வெற்றி பெறுவார் , இதற்காக பணம் பந்தயம் கட்ட படும் .
தேவையான நபர்கள் : குறைந்த பட்சம் 2 நபர்கள் .
சூதின் உச்சம் :
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி கடைசியில் கொலை வரை நடந்திருகிறது . விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுவர்கள் படிப்பில் கவனம் குறைந்தார்கள் சிலர் படிப்பையே விட்டும் இருகிறார்கள் .
களம் :
தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களில் சிறுவர்கள் அதிகமாக விளையாடும் ஒரு விளையாட்டு (சூதாட்டத்தின் ஆரம்பமாக கருதபடுவதும் இதைதான் ).
டிப்பு :
ப கட்டத்திற்கு வெளியே அடித்தால் தோற்றதாக அர்த்தம் அதன் பெயர் டிப்பு .

--------------*-------------------
ஹே டிப்பு டிப்பு டிப்பு குதுகலித்தான் ராமு கைகாசு 1 ரூபாய் எடுத்து கொண்டு , உன்ன நம்பி பந்தியம் கட்டுன பாரு என்ன செருப்பால அடிக்கனும்ட மண்டமூக்கா என கேசவனை பார்த்து கோபித்து கொண்டான் ரங்கன் .
மாது 1 ரூபாய் போட்டு இப்ப என்னோட கைட .. நேத்து 8 ரூப தோத்துருக்கேன் இன்னிக்கி அத இழுக்கமா போறதுல்ல , கொட்டுட ராமு ...
ராமு 2 குண்டுகளை கொட்டினான் , அடிட மேல என்றான் மாது
இரு இரு இரு என்று குறுக்கிட்டு ராமு தோக்றான் 2ரூபா யார் பந்தயம் என்றான் ரங்கன் , ஒருத்தனும் வாய் திறக்கவில்லை ...
சரி ராமு ஜெயிக்கிறான் 1ரூபா ... கேசவ நீ ... இந்தாட 1 ரூ ராமு தோக்றான்...
மாது அடி மேல ... ஓங்கி அடிதான் ராமு மேல் குண்டு அடி பட்டு தெரித்தது ....
திடிரென ராமு ஒட்டாம் பிடித்தான் , என்னவென்று தெரியாமல் கேசவன் ,ரங்கன் மாது முழித்தனர் , நில்லுட நில்லுட ராமு என்று ஒரு சத்தம் ராமுவின் தாத்தா இராமநாதன் அவனை துரத்தி கொண்டே சென்றார் சிட்டென பறந்தான் ராமு ...
ஓடி வந்த வேகம் கால் கடுத்தது மெதுவாக நடந்தான் இந்த தாட்தவால 4ரூப போச்சே எடுக்காம வந்துட்டேனே என்று மனதில் கோப பட்டுகொண்டான் .
அடியேய் செல்லமா உன் பேரன் பள்ளிக்கூடம் போகாம குண்டடிசிட்டு இருகாண்டி நில்லுடான மான் மாதிரி ஓடறான் இந்த திறமைய ஒரு ஓட்ட பந்தயத்துல காட்டுனவது வாழ்க்கைக்கி உதவும் அத விட்டுபுட்டு குண்டடிசிட்டு கெட்டு போறான் ராஸ்கோலு.
இன்னைக்கி அவன் பள்ளிக்கூடம் போவல ஒரு வாரமா அவன் அப்படியேதான் ஓடிட்டு இருக்கான் , அப்பா அம்மா தூர தொலவுல கஷ்ட படறாங்களே நாம படிப்போம் நல்ல ஆபிசர வரணும்னா நினைக்றான் இல்ல, எங்க குண்டடிக்ரான்களோ அங்க மொதல்ல போய்றான் வீட்ல வைக்ர காச திருட ஆரம்பிச்சிட்டான் , கடுகு வாங்கிட்டு வாடன்ன அந்த காசையும் குண்டாட்டம் போடறான் , ராத்திரி ஆனா சாராயம் குடிச்சிட்டு உன்னோட தொல்ல அதும் இல்லாம வீட்டுக்கு வராம ஓடிட்டே இருக்குற உன் பேரனோட தொல்ல என்னத்த சொல்ல அவன நா தேடி தேடி என் மூட்டு வழிதான் மிச்சம் என கடிந்து கொண்டால் செல்லமா ஆயா.

இரவு நெடு நேரமாகியும் ராமு வரவில்லை ராமநாதன் வாசலிலே அமர்ந்திருந்தார் அப்படியே தூங்கியும் போனார் . தாத்தா தூங்கிவிட்டதை மறைந்திருந்து பார்த்த ராமு பூனைபோல் நட நடந்து வீட்டிற்குள் புகுந்துவிட்டான் இருளில் தட்டு தடுமாறி செல்லமா ஆயா மீது விழுந்து விட்டான் ,
ஐயோ திருடன் திருடன் என அலறிவிட்டாள் யாரா அவன் என்று ராமநாதன் அதட்டி கொண்டே உள்ளே நுழைந்தார் ..
ஆயா ஆயா நாதான் என்று அலறினான்
இம்புட்டு நேரம் எங்கட சுத்திட்டு வர நாயே பேயே என்று வாய்க்கு வந்த படி திட்டிகொண்டே சோறு போட்டால் செல்லமா ...
ஏய் ஏண்டி கத்துற கம்முனு சோறு போடுடி செல்லமாவை அதட்டினார் ராமநாதன் .
காலையில் இருந்து சாப்பிடாத ராமு பசியில் வாரி வயத்துக்குள் போட்டு கொண்டு இருந்தான் தாத்தா பக்கத்தில் வந்து அமர்ந்தார் ..
ராமு உங்கப்பன் என்மேல இருக்க பாசத்துல உனக்கு ராமுன்னு பேரு வச்சிருக்கான் அத கெடுத்துடாத சாமி நீ நல்ல படிக்கலான தாத்தாவுக்குதாண்டா கேட்ட பேரு .
சரி தாத்தா நா இனி சரியாய் பள்ளிக்கூடம் போறேன் என்றான் ராமு .
அடுத்த நாள் நல்ல பிள்ளையாய் பள்ளிக்கூடம் சென்ற ராமு 6 மணியாகியும் வீட்டிற்கு வர வில்லை , ராமநாதன் தேடி சென்றான் பள்ளிகூடத்திற்கு
அய்யா என் பேரன் இன்னும் வீட்டுக்கு வரலைங்க , எல்லா குழந்தைகளும் 4.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டர்களே யாரும் உள்ள இல்லைங்க நீங்க நல்ல உங்க சொந்தகாரங்க வீட்ல பாருங்க என்றார் பாதுகாவலர்

தேடி தேடி அலுத்துப்போன ராமநாதன் கடைசியாக ராமு குண்டு விளையாடும் இடத்திற்கு வந்தார் அங்கே ராமுவும் ரங்கனும் காசுக்காக சண்டை போட்டுகொண்டு இருந்தார்கள்
அதை பார்த்த ராமநாதன் ஓடி போய் ராமுவையும் ரங்கனையும் பிடித்து கொண்டார் .

பின் இருவருக்கும் ஆளுகொரு அடி குடுத்து ராமுவை வீடிற்கு அழைத்து வந்தார் .
ஏண்டா ராமு பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வராம என்னடா உனக்கு விளையாட்டு .. அதும் படிக்காத ஊர் சுத்திர பசங்களோட சேர்ந்து உருபடாம போய்டுவா ..

தாத்தா பள்ளிக்கூடம் போய்ட்டு வந்துதானே விளையாடறேன் என்ன தப்பு . இந்த தாத்தா எப்பும் இப்படிதான் என்று மனதில் அலுத்து கொண்டான் ..
பணம் போட்டு விளையாடக்கூடாது ராசா 1 ரூபா சம்பாதிக்க எவளோ கஷ்ட படறோம் நாங்க நீ சாபிட்டாலும் பரவல ஆனா இப்படி கண்டவன்கிட்ட விட்டுபுட்டு வர . நீ சம்பாதிச்சா அருமை தெரியும் ...

ஆமா தாத்தா காசு காசு கெடக்கட்டும் நா உங்களுக்கு நிறைய சம்பாதிச்சி தரேன் பெரியவனானதும் ..
ராமநாதன் தாத்தாவுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை .

சனி ஞாயிரு 2 நாள் விடுமுறையேய் நினைத்து ராமுக்கு மிக சந்தோசம் . விடிந்ததும் சாப்பிட்டு விட்டு ஆயா நா விளையாட போறேன் என்று சிட்டாக பறந்தான்
நண்பர்களை சந்தித்தான் அனைவரும் இன்று பழனிமுத்து தாத்தா வீட்டில் கல்லக்காய் உரிக்கும் வேலையேய் செய்யலாம் என்று கிளம்பினார்கள்
ஒரு மரக்காய் காய்ந்த கல்லகாய் உரித்தால் 2 ரூபாய் . இன்னிக்கி ஒரு 10 ரூபவது சம்பாதித்து காட்டவேண்டும் நம்ம தாத்தாவுக்கு என்று மனதில் நினைத்தான் .

1 மரக்கா கல்லகாய் கொட்டப்பட்டது ராமுவுக்கு மற்றும் நண்பர்களும் தலா 1 மரக்காய் வாங்கி கொண்டனர் ..
படு வேகமாக உரிக்க ஆரம்பித்தான் ராமு கல்லைக்காயஏய் தரையில் குத்தி உடைத்து தள்ளினான் ...
சுமார் ஒரு 10 மணிக்கு ஆரம்பித்து 12 மணி வரை விடாது உரிததில் ஒரு மரக்காய் தீர்ந்தது , பழனி தாத்தா ராமு 1 மரக்காய் - 2 ரூபாய் என்று எழுதி கொண்டார் .
ராமுவின் நண்பர்களான ரங்கன் , கேசவன் ,மாது தலா ஒரு மரக்காய் உரித்து விட்டு கை வலிக்குது என கிளம்பி விட்டானர் .. சாப்பாடிற்கு ..

ராமுவோ இன்னும் ஒரு மரக்காய் கொடுங்கள் என்று வாங்கி கொட்டி கொண்டான் , தரையில் கல்லைகாயேய் குத்தி குத்தி உரிக்க விரல்கள் வலி எடுக்க ஆரம்பித்தது முக்கியமாக கட்டை விரல் .
ராமு மெது மெதுவாக உரித்து கொண்டிருந்தான் மணி 3 ஆகியும் 2 வது மரக்காய் முடிந்த பாடில்லை .. எப்படியோ 4 மணியளவில் 2 வது மரக்காயேய் உரித்து முடித்தான் .
அப்போது நண்பர்கள் சாபிட்டு விட்டு தூங்கி எழுந்து வந்தனர் ..

பழனி தாத்தா எனக்கும் ரங்கனுக்கும் ஒரு மறக்க கொட்டுங்க என்றான் மாது

நண்பர்கள் வந்த சந்தோஷத்தில் இன்னொரு மரக்காய் வாங்கி கொண்டான் ராமு மூன்று பேரும் உரிக்க ஆரம்பித்தனர் ராமுவுக்கு கை வலி அதிகமானது .. இருந்தாலும் தொடர்ந்து உரித்து கொண்டிருந்தான் ..

நல்ல நாளையே இந்த பய வீட்டுக்கு வரமாட்டான் இன்னைக்கு விடுமுற நாலு எங்க இருக்கானோ நா போய் பார்த்துட்டு வரேன் செல்லம்மா என்று ராமநாதன் ராமுவ தேடி சென்றார் , எங்கயும் கிடைக்கவில்லை விளையாடும் இடம் , அங்கு இங்கு என அலைந்து வரும் வழியில் பழனி தாத்தா வீட்டில் இருப்பதை பார்த்தார் " 2 மரக்கா உரிச்சிடேன் " என்ற ராமுவின் சத்தம் ராமநாதன் ராமுவை கூப்பிடாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ..

ராமுவின் நக கணுக்களில் காயமே ஏற்பட்டு விட்டது ஒருவாறு 3வது மரக்காயும் உரித்து விட்டான் .
பழனி தாத்தா முடிஞ்சது நா வீட்டுக்கு போறேன் என்றான் ...
பழனி தாத்தா வீட்டினுள் இருந்துகொண்டு எலேய் இருடா வரேன் ... ஒரு பானை நிறைய மோரை கரைத்து கொண்டு வந்தார் காலைல இருந்து யாரெல்லாம் வீட்டுக்கு போவம இருந்தாங்களோ அவங்களுக்கு எல்லாம் முதல இந்த மோரை குடிங்க என்றார் மோர் குடுத்த கையேடு 6 ரூபாய் வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தான் ராமு

தாத்தா தாத்தா ஒரு முகமலர்ச்சியுடன் இந்தா புடி 6 ஒத்த ரூபாய் தாத்தாவின் கையில் போட்டான் ..

ராமநாதனுக்கு புரிந்தது இதுதான் சந்தர்ப்பம் என்று

ராமு நா இந்த 6 ரூபைக்கி சாராயம் குடிசிகிட்டுமா ?

தாத்தா !!! நா காலைல இருந்து கஷ்ட பட்டு கல்லக்கா உரிச்சி சம்பாதிச்ச காசுல நீ சாராயம் குடிகறேனு கேட்குறா .. என்று கண் கலங்கினான்

ஏன்டா நாங்க வெயிலையும் மழைலயும் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காச கொண்டு போய் குண்டாடுவ ,
திருடிட்டு பொய் கண்டவன்கிட்ட விட்டுட்டு வருவ அப்போல்லாம் எங்க கஷ்டம் உனக்கு தெரியலையா , இதுவர எவளோ காசு ஆயா பையில இருந்து எடுத்துருப்ப
எவளோ லாக்கு விளையாண்டு தோத்துருப்ப ?

நீ கஷ்டப்பட்டு சம்பாதிச்ச 6 ரூபான்னதும் உனக்கு ஒஸ்தி ஆகிடுச்சி இல்ல ...

கண் கலங்கி கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது ராமுவுக்கு ...

டேய் டேய் அழுவாத தாத்தா உன் நல்லதுக்கு தான் சாமி சொன்னேன் . இந்தா 6 ரூபா நீயே வச்சிகிட்டாலும் சரி குண்டாடடுதுல விட்டாலும் சரி என்று எழுந்து போய்விட்டார் ராமநாதன் .

செல்லம்மா ஆயா சாப்பாடு போட்டால் 6 1 ரூபாயேய் மீண்டும் மீண்டும் எண்ணி கொண்டே சாபிட்டு முடித்தான் ராமு , படுக்கைக்கு சென்ற பின்னும் எண்ணி கொண்டே இருந்தான் .

விடிந்தது ஞாயிற்று கிழமை

ஆயா நா வெளிய போறேன் என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தான் ராமு
வழியில் ரங்கனும் மாதுவும் நின்று கொண்டிருந்தார்கள் நிர்க்கமல்கூட ஓடினான் கனகா மளிகை கடை நோக்கி நின்றது கால்கள்
அண்ணே கரடி பொம்ம டப்பா எவளோ ?
2 ரூபா கண்ணா ..
வாங்கி கொண்டு விரைந்தான் வீட்டுக்கு வாசலில காத்திருந்தான் தாத்தாவுக்காக ..
தாத்தா வந்தார் தாத்தா தாத்தா ..

என்ன சாமி . 4 ரூபாயேய் தாத்தாவின் கைல கொடுத்தான் மேலும் என் கைல என்னனு சொல்லு பாக்கலாம் . என்னது ?.
உன்ன்ன்னட்ட்டியல்......(உண்டியல் )

உனக்கு எவளோ தேவையோ எடுத்துகிட்டு மீதிய இந்தா உண்டியல போடு தாத்தா நா சேர்த்து வைக்கறேன் என்றான் ராமு ..

ராமுவை கட்டியெனைது வாரி கொண்டார் ராமநாதன்

4 ரூபயேயும் உண்டியெலில் போட்டார் தாத்தா மேலும் அன்றைய சாராய செலவுக்கான 10ரூபாயும் உண்டியலில் போட்டு முத்தமிட்டார் ராமுவை ...

எழுதியவர் : வாழ்க்கை (5-Dec-13, 7:36 pm)
பார்வை : 225

மேலே