மனச்சிறையினுள்ளே

சிறையிடப்பட்ட
மணிப்புறாவாய் யான்...!
தூரத்திலிருந்தே
பழக்கப்பட்ட சமூகமிது.....!
என்னுள்ளே
கருகிப்போன
இளமை உணர்வுக்கு
உயிரூட்டவோ
சிதைந்து போன
கனவுகளை யாசிக்கவோ
யாருமே
யோசிக்கவில்லை....!
சீதனங் கேட்டே
எனை
எடை போட்ட
முதலாளிக்கூட்டங்கள்....!
நீட்டிய தேநீரில்
எனை
தேனீக்கள் தீண்டிய
மலராய்
துவம்சம் செய்த
படையெடுப்புக்கூட்டங்கள்....!
எத்தனை அரங்கேற்றம்
மாப்பிள்ளை சபையினிலே.....!
எதுவுமே அங்கீகரிக்கப்படவில்லை.....!
கழியாத கன்னி
தணியாத இளமை
சிதையாத மௌனம்
யாவுமே
எந்தன் வறுமை தீயிலே
தீய்ந்து போயிற்று......!
ஆனபோதும் யாசிக்கிறேன்.....!
எந்தன் வயது தாண்டிய
எல்லைய
வேலியிடத் துணியும்
எந்தன் பெண்மைக்காக
ஓர் மணாளனை.......!

எழுதியவர் : (6-Dec-13, 4:58 pm)
சேர்த்தது : Jeevajothy
பார்வை : 292

மேலே