நீயும் நானும்

பாலை வனத்தில்
பற்றியெரியும் வெய்யிலில்
வெற்றுக் கால்களுடன்
நீயும் நானும்!

மாலை நேரத்து
மஞ்சள் வானத்து மறையும்
சூரிய அழகில்
நீயும் நானும்!

வாச மலர் தோட்டத்தின்
வண்ண மலர்களிடையே
பாச பிணைப்பில்
நீயும் நானும் !

ஒருவரையொருவர்
பார்த்தபடியே
காத்திருப்போம்
ஒன்று சேர........!!!

எழுதியவர் : ரெங்கா (28-Jan-11, 7:52 am)
சேர்த்தது : renga
Tanglish : neeyum naanum
பார்வை : 521

மேலே