வெற்றிக்கு வழி

மூன்று பேர்கள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்கு தயாராகினர். அவர்கள் மலையேறத் தொடங்கும் பொழுது பார்வையாளராக இருந்த ஒருவர் "இவ்வளவு உயரமான மலையில் ஏறும் போது வழியில் கற்கள் தடக்கி விழுந்தால் அவ்வளவு தான்" என்றார். உடனே ஒருவன் மலை ஏறுவதை நிறுத்தி விட்டான். சிறிது தூரம் சென்றவுடன் இன்னொருவர் "மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்துக் கடித்து விட்டால் என்ன செய்யப் போகின்றாய்" என்றார். உடனே மேலும் ஒருவன் கீழிறங்கி விட்டான் . ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாமவன் மட்டும் மலை உச்சியை சென்றடைந்தான். பின்னர் கீழிறங்கிய அவனிடம் அங்கிருந்த ஒருவர் "உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது" என்று கேட்டார். அதற்கு அவன் "எனக்குக் காது கேட்காது" என்றான். நாமும் வாழ்வில் செவிடர்கள் போல இருந்தால் தான் சில நேரங்களில் முன்னேற முடியும்.

எழுதியவர் : (7-Dec-13, 8:49 am)
Tanglish : vetrikku vazhi
பார்வை : 153

மேலே