வளர் பிறை -2
20 கிமீ தொலைவு பயணத்திற்கு பின் வந்தது அந்த பள்ளி ஆண்,பெண் இருபாலர் பள்ளி
பைக்கிலிருந்து இறங்கினாள் ஜெனி,,,,, "bye அண்ணா,, ஈவிங்க் பாக்கலாம்"- என்று புன்னகையோடு கை அசைத்தாள்,,
ஆனந்தும் அவளிடமிருந்து விடைப் பெற்று தன் அலுவலகம் நோக்கி போனார்,,,
அவர் சென்றவுடன் ஜெனி தனது புத்தக பையுடன் நின்றாள்,,,,,,,,
அவள் முகத்தில் ஒரு குறு நகை,,,, அந்த சிரிப்போடு உள்ளே நுழைந்தாள்,,,,, இதோ அவள் எதிர்ப்பார்த்த தருணம் ஆரம்பம்
"குட் மார்னிங் ஜெனி"
"குட் மார்னிங் ஜெனி"
"குட் மார்னிங் ஜெனி"
"குட் மார்னிங் ஜெனி"
"குட் மார்னிங் ஜெனி"
"குட் மார்னிங் ஜெனி"
"குட் மார்னிங் ஜெனி"- வரிசையாக காலை வணக்கங்கள் வந்து விழ எதையுமே கவனியாதவளாய்.,,,,,,,,,, இளமையின் திமிரோடு அந்த வணக்கங்களை கடந்து வந்தாள்,,,
அவள் பதில் சொன்னாலென்ன சொல்லாவிட்டால் என்ன அவளை பார்பதையே பாக்கியமாக நினைத்து அந்த கூட்டம் தத்தம் வகுப்பிற்கு மனமே இல்லாமல் சென்றது
தன் வகுப்பிற்குள் நுழைந்தாள் ஜெனி,,,,, தோழிகள் அவளை சூழ்ந்து கொண்டார்கள்,,,,,,,
"என்ன மேடம் இன்னைக்கும் வரவேற்பெல்லாம் திருப்த்தியா இருந்துச்சா,,,,, வாங்க வேண்டிய வணக்கமெல்லாம் வாங்கியாச்சா"-என்றாள் ரேவதி
"ம்ம்ம்ம்ம்ம்ம் பிரமாதம்"- என்றுவிட்டு சிரித்தாள் ஜெனி
"தினம் தினம் உன் ரசிகர் கூட்டம் அதிகமாயிட்டே போகுது ஜெனி"-என்றாள் லலிதா
"ம்ம்ம் என் அண்ணா கூட இத தான் சொன்னாரு"
"குடுத்து வச்சவடி நீ,,,,, உனக்கு ரொம்ப நல்ல அண்ணன் கெடச்சிருக்காரு,,, என் அண்ணனும் இருக்கனே என்ன ஒரு பையன் கிண்டல் பண்றான்னு சொல்றேன்,,,,,, நீ அவன என்ன பண்ணுனேன்னு என்னையே கேக்குறான்"- என்றாள் சிந்து
"ஹே நீ ஜெனி family -ய என்னனு நெனச்ச அவங்க வீட்டுக்கு இவ தான் queen ,,,,,,,, தெரிஞ்சிக்கோ"- என்றால் லாவண்யா
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவள் வகுப்பு ஆசிரியை உள்ளே நுழைய அனைவரும் தத்தமது இருக்கைக்கு சென்றனர்
வகுப்பு ஆரம்பமானது,,,,,,,,,
பள்ளியில் மாணவர்களுக்கு மட்டுமல்ல சில ஆசியர்களுக்கும் ஜெனியின் அழகில் மயக்கம் உண்டு
சில ஆசிரியைகளுக்கு ஜெனி மீது அவள் அழகு மீது கோபமும் பொறாமையும் கூட உண்டு
அத்தகைய தங்க மகள்,,,,,,,, அழகில் மட்டுமல்ல குணத்திலும்,,,,,,, அன்பு கருணை பாசம் எல்லாமே ஜெனியிடம் இயற்கை குணங்களாக இருந்தன
மாலை வகுப்பு முடிந்ததும் ஜெனியின் ஆசிரியை ஜெனியை தனியாக அழைத்தார்,,,
"ஜெனி உன்ன கிளாஸ் டீச்சர் கூப்டுரங்க டி"-என்றாள் சிந்து
"போடி போ வழக்கம் போல உனக்கு தனியா கிளாஸ் எடுத்து அறுக்க போகுது உன் தலை எழுத்து போய் கேளு"- என்று சகல மரியாதையோடும் வழி அனுப்பி வைத்தனர் தோழிகள்
"மே ஐ கம் இன் டீச்சர்"
"எஸ் ஜெனி கெட் இன்"
"கூப்டீங்களா டீச்சர்"
"ஆமா "
"ஏன்??"
"ஏன்னு உனக்கு தெரியாத ஜெனி"
"தெரியும் டீச்சர்"
"இருந்தாலும் சொல்றேன்,,,,,,,, நீ நல்ல பொண்ணு , அதிலும் அழகான பொண்ணு , அழகுக்கு ஆபத்து எப்படி வேணும்னாலும் வரும்,,, நீ தான் பாத்து நடக்கணும்,,,, உனக்கு நல்லது எது கேட்டது எதுன்னு பாத்து தெரிஞ்சிக்க தெரியனும்,,, என்ன "
தினமும் இதே பிரசங்கம் தான்,,,, இதை கேட்டு கேட்டு ஜெனிக்கே அலுத்து விட்டது,,, ஆனால் தன ஆசிரியை மனம் நோக கூடாது என்பதற்காக தினமும் இதை கேட்டு செல்வாள்
"ஓகே டீச்சர்"
"ம்ம்ம் உன் அண்ணன் வந்துட்டாரா"
'
"இனிமே தான் டீச்சர் வருவாங்க"
"உன் அண்ணன் இல்லன அப்பா இல்லாம நீ யாரோடையும் போகாதா காலம் கேட்டு கிடக்கு சரியா"-என்று வாஞ்சையோடு அவள் தலையை தடவிக் கொடுத்தார்
ஆசிரியர் என்பவர் இன்னோர் தாய் என படித்திருக்கிறாள் ஜெனி அது உண்மை தானோ ?????
(வளரும் ,,,,,,,,,,,,,,,,,,,)