சிறுவர் பாடல்

பல் பாதுகாப்பு

“அதிகாலையில் படிக்காது
தூங்காதே பாப்பா!

படுவேளையில் பல்துலக்கி
தூங்கிவிடு பாப்பா!

மிட்டாய்க்குச்சி மென்றால்
பற்சொத்தை பாப்பா!

வேலங்குச்சி மென்றால்
பற்சத்து பாப்பா!

பனியில் உடல்
நடுங்கும் பாப்பா!

பனிக்கூழில் பல்
நடுங்கும் பாப்பா!

கல்லிடுக்கில் பந்து
நீர் நிரப்ப மிதக்கும் பாப்பா!

பல்லிடுக்கில் பருக்கை
நீர்க்கொப்பளிப்பால்
நீங்கும் பாப்பா!

மேலிருந்து கீழ்
சறுக்கி விளையாடு பாப்பா!


மேலிருந்து கீழ்
பல் துலக்கி பழகிடு பாப்பா!

இளித்த வாயில்
வெளுத்த பற்களோடு
நண்பர்கள் பலரை
பெற்று மகிழ்ந்திடு பாப்பா!”

எழுதியவர் : அமுதாசன் (7-Dec-13, 4:19 pm)
பார்வை : 111

மேலே