நெல்சன் மண்டேலா 1918-2013

தென் ஆப்ரிக்காவின் தேச தந்தை
வேறு பாடுகளை வேரருத்தவர்

இனம் மொழி நிறம் மதம் கடந்து
மனிதர்களை கண்ட மாணிக்கம்

கறுப்பரில் ஒரு வெள்ளை மனம்
இவர் உள்ளம் கொண்ட எண்ணம்

மனிதன் மரண ஓலம் கேட்கும் நாடுகளில்
நேசக்கரம் நீட்டும் பாசமுடையவர்

தென் ஆப்ரிக்காவின் முதல் கருப்பு
பிரதமர் இவர் என்பது பெருமை

அமைதிக்காக நோபல்பரிசு பெற்ற
அன்பு உள்ளம் கொண்ட சேவை எண்ணம்

பல முறை சிறை சென்ற தியாகி எனலாம்
உலகின் சுதந்திர போராட்டங்களுக்கு

போர் வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு
போதித்து அதை சாதித்தவன்

இந்த கருப்பு மனிதனின் கனவாக இருந்தது
ஆப்ரிக்க மக்களை உலகிற்கு அடையாளம் காட்ட

நெல்சன் மண்டேலா !

புதுமை விடியலின் புத்தகம்
பார்த்து படிக்க பக்கங்கள் ஏராளம் !

நேசம் கொண்ட ஒரு கருப்பு மனிதன் !

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (7-Dec-13, 4:51 pm)
பார்வை : 69

மேலே