புரட்சி வேண்டாம் புரிதல் போதும் -கார்த்திக்
புரட்சியொன்று செய்திடல் கண்டோம்
ஆங்கே நா வறட்சியோடு பேசிடும்
பொழுதினில் மட்டும் புதிதாய் வெப்பம்
ஆங்காங்கே பரவுதல் கண்டோம் !!!
முகத்தினில் கோடிசூர்ய பிரகாசம்
ஜகத்தினில் விடியுது சத்தியம் என்றோம்
பத்தியம் இருந்திட சொன்னோம் -பகட்டுத்தனம்
மொத்தமும் புதைக்க சொன்னோம் !!!!
போராடும் ஆற்றல் மூளைக்குள் பாயும்
சத்தியம் என்றும் நிலைத்திடும் என்றோம்
தீட்டிய காதுகளில் வார்த்தைகள் எல்லாம்
இடி முழக்கம் என இறங்குதல் கண்டோம் !!!!
மேற்கே பகலவன் மறைவது போலும்
கொட்டிய வார்த்தைகள் யாவும் -மண்ணில்
புதையும் காட்சியை காணும் பொழுதோ
மடையன் நான் என புரிந்துகொண்டோம் !!!!
இனி புரட்சி என்றோர் பெயரே வேண்டாம்
அவரவர் செயலுக்கு விளைவுகள் உண்டாம்
இவ்விதியினை புரிந்தால் குழப்பங்கள் நீங்கும்
நித்தமும் வாழ்வினில் செழிப்புகள் தோன்றும் !!!
செயல் விளைவு என்ற தத்துவம் மூலம்
பாரே இயங்கும் இயக்கத்தை பாரீர்-எம்
பாரதவேதத்தின் பொருளாய் வாழும்
ஞானிகள் கூற்றும் இதுவே உணர்வீர் !!!!
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

