தியாகச் செம்மல்
செக்கிழுத்த சிதம்பரானார்
செய்த தியாகம்
வேறெந்த விடுதலை
வீரர் கண்டார்?
வறுமை நாட்டில்
செழுமையாய் இருந்தபோது
தனிமனித உழைப்பில்
கப்பல் வாங்கி
வெள்ளையரை விரட்டிட
சவால் விட்டவர்.
சிறையிலவர் பட்டதுன்பம்
சொல்லில் அடங்கா.
வெள்ளித் திரையில் பார்த்து
அவர்பாதம்
பணிந்து நின்றோம்.
தியாகச் செம்மல் சிதம்பரானார்
ஆற்றிய தொண்டு
தமிழர்களில் பலபேரே
அறியாதிருக்க
நாட்டில் உள்ளோர்
எத்தனைபேர் அவரையறிவார்?
கைம்மாறு பாராமல்
உழைத்தவர் எல்லாம்
வறுமையைத்தான் வாரிசுகளின்
சொத்தாக்கினார்.
செக்கிழுத்து செந்நீர் சிந்தி
நாட்டிற்(கு) உழைத்த
செம்மலின் வாரிசுகளுக்கும்*
அந்த நிலைதான்.
* செய்தித் தாளில் சென்ற ஆண்டு வெளியான செய்தி. வ.உ.சியின் பேத்தி இட்லிக்கடை நடத்தி வறுமையில் வாடுவாதாகவும், அதைக் கேள்விப்பட்ட அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு அரசு உதவிபெற உதவியதுதான் செய்தி.