பெண்மை காதல் மெய்யா

பூக்கள் உயிர் தியாகம் செய்கிறது
பெண்கள் ஆண் உயிரை தீர்த்தம் என குடிக்கிறாள்.....
மொழிகள் யாவும் புலம்புகிறது
ஆங்கிலம் மின்னல் அள்ளிவீச
தமிழ் மொழி வான் உடைந்து
எழுத்துக்கள் கார் மேகமாய் சிதைந்து கண்ணீர் பொழியும்.

உயிர் எழுத்துக்கள் உயிரினை வாழவைக்க
ஏவல் கேட்க்கும்....
மெய் எழுத்துக்கள்
மெய் வெந்து போகாதிருக்க
ஒய்யாரமிடும்....
உயிர் மெய் எழுத்துக்கள்
பென் பொய் என்று நீதி கேட்டுக்கதறும்..

பயன் ஏதும் கிடையாது
ஆயுத எழுத்து அடுப்பு என்னவே
பெண் இதயம் ஆணிணை
விறகாக வைத்து எறித்துக்கொண்டிருக்கிறது....

பெண்னை காதலியாக
மாற்ற முடிகிறது..
காதலியை பெண்ணாக
மாற்ற முடியாமல் போகிறது,,

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (7-Dec-13, 8:42 pm)
பார்வை : 120

மேலே