சாது மிரண்டால் காடு கொள்ளாது
என்னை விமர்சிப்பவர்களைப் பற்றி
நான் கவலைப் கொள்வதில்லை - ஆனால்
அனுதாபப்படுகிறேன்
என்னை விமர்சிப்பர்கள் இன்று(இங்கு)
மட்டுமில்லை
என்னை விமர்சிப்பவர்கள்
யாரும் வேற்று கிரக வாசிகளில்லை
என்னுடன் ஒரு காலத்தில்
நட்புக் கொண்டவர்கள் மட்டுமே
நான் எழுந்தால் ஒருஎட்டு வந்து பார்க்காதவர்கள்
நான் விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பவர்கள் அவர்கள்
என்னைப் பற்றி
சிந்திப்பதை விடுங்கள்!!!
எனக்கு தாகம் அதிகம்
மழை நீர் போதாது -என் பயணம் சமுத்திரத்தை
நோக்கி தான்!!!
என்னால் தண்ணீருக்குள்ளும்
சுவாசிக்க முடியும்
என் நம்பிக்கைக்கு பல
கைகள் உண்டு
விதியை நம்பி
முகந்தொங்க மாட்டேன் - நான்
மூலிகைத் தமிழன்
என் கர்வமெல்லாம்
கிராம்; கணக்கில் தான் - ஆனால்
நம்பிக்கை கிலோ கணக்கில்!
விலகி போன பிறகு விழுந்து
கிடப்பதெல்லாம் முட்டாள்தனம்
நான் முட்டாளில்லை!!!
என் பின்னால் என்னைப் பற்றி
பேசி என்னை பெரியவனாக
மாற்றி விடாதீர்கள்!!!
என்னால் தீயையும்
மூட்ட முடியும்
தீபமும் ஏற்றவும்
முடியும்
ஆனால் ஒன்று
மட்டும் இறுதியாக
"சாது மிரண்டால்
காடு கொள்ளாது"
என்னை மிரள
வைத்து மட்டும்
பார்த்து விடாதீர்கள்
இழப்பு உங்களுக்கு
உங்களுக்கு மட்டுமே!!!