ப்ரமனை சபிக்கிறேன்

கடைசியாய் உன் கண்
முன்னே நிற்கிறேன்
என் மகிழ்ச்சியை
உன்னிடம் விற்கிறேன்

தா !!!!
விலையாக தா...
வலியை விலையாக தா..

சிறுது போதும்
சிறுக சிறுக செத்தவன் நான்
சிறுது போதும் ...!!!!

எஞ்சியவை மிஞ்சியவை சேமித்து வை
அல்லாது போனால் எதிர்க்காலத்தில் இல்லாது போகும்
வழிய வருவோர்க்கு வலியில்லை என்று
சொன்னால் உன் வள்ளல் குணம்
செத்து போகாதோ...!!!!

ப்ரமனை சபிக்கிறேன்..!!!
உன் கண்ணை படைக்கையில்
அவன் கண்ணும் கருத்துமாய் இல்லாது போனமையால்..

ப்ரமனை சபிக்கிறேன்..!!!
உன்னை படைத்து அதற்க்கு முன் என்னை படைத்து
என்னை உன்னிடம் இரந்து நிற்க செய்த ப்ரமனை சபிக்கிறேன்..

ப்ரமனே நீ கல்லாய் போ...
இவள் மனம் கல்லாய் போ...
இவள் கல் மனதை காட்டிலும் கடினமாய் போ..

எழுதியவர் : (8-Dec-13, 10:21 am)
பார்வை : 77

மேலே