போதுமடா
இது என்று எழுத
அது உறவுமல்ல
அது என்று சொல்ல
இது அகிலமும் அல்ல
குனிந்து வளைந்து
நெளிந்து நிமிர்ந்து
குவலயம் அறியுமுன்னே
தட்டிச் கழித்தாய் தகுதியை
கூடு பாயுமுன்னே கோட்டை கட்ட
தள்ளிவிட்டாய் உன் விருப்பமதை
தொட்டு திறந்தாய் திகைப்புடன்
விட்டுப் பிரிந்தாய் பெண்மையாய்
விளக்கிச் சொல்ல விருப்பமில்லை
கேட்கும் பொறுமையும் தரவில்லை
கணீர் குரல் கைவிட கவலைஎனக்கில்லை
எடுத்துச் சொல்ல நீ ஏமாளியில்லை
எனக்கென்று தேடினேன்
எதிர்பார்த்து ஓடினேன்
எனக்கென்று இல்லை
ஏகோபித்த தொல்லை
இதழோரம் நகைப்பு
இருந்ததில்லை தவிப்பு
விட்டுவிடு வெறுப்பு
விருப்பமொன்றே இணைப்பு