முட்டைக் கோது கிராமமும் நான் எனும் கோடையும்
என் ஒள்ளுப்பம் மூச்சுக் காற்றும்
அந்த பாடலை சிறகுகளில் பூட்டிக்கொள்ளும்
கத்தரித் தோட்ட இலைகளில் காதுவைத்து
வாப்பாவின் விளர்வைத் துளிகளின் ஓசை கேட்கும்
உப்புக் குடிக்கும் இதமாய்
பாக்கும், வெத்திலையும்
மூத்தம்மாவின் வாயும் தென்றல் பறிக்கும்
என் தொலைந்த நெலா
அங்கேதான் எங்கேயோ தெரிகிறது
மண்ணுமில்லாமல், சுரியுமில்லாமல்
எனது நிலம் நீர் வற்றி சூம்பியிருந்தது
அது எனது கிராமம்போலில்லை போலி, என் கருவின் ஓடு
மூத்தம்மாவின் கிழட்டுக் கண்ணீர் ஒரு கோப்பையும்
பிச்சைக்காரிக்கு மகனாய் பிறந்த
எனது இரத்தம் ஒரு கோப்பையும்
இந்த கிராமத்துள் பூத்திடாதா பூவாய்
கடலோரத்து சிப்பிக்குள் ஊறிடாதா
ஏதோ ஒரு திரவமாய்